கடல் தாண்டி சாதிக்க சென்ற ஈழத்து சிறுமி! கண்ணீர் விட்ட நடுவர் : அரங்கமே சிலிர்த்து நின்ற தருணம்

யாழ்ப்பணத்தைச் சேர்ந்த கில்மிஸா என்ற சிறுமி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அவர் நேற்றைய நிகழ்ச்சியில் பாடிய பாடல் ஒட்டு மொத்த அரங்கத்தினையும் கவர்ந்திருந்தது.

‘சரிகமப’ மேடையில் பாடி முடித்த பிறகு, கில்மிஸாவின் தாயார் நெகிழ்ந்து பேசியது நடுவர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

வெற்றியுடன் கில்மிஸா நாடு திரும்ப வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இதேவேளை, இலங்கையில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினியும் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.