கழுத்தில் மாலையோடு பிக்பாஸ் பிரபலம் ஜணனி வெளியிட்ட பதிவால் அதிர்ச்சியில் உறைந்த ஜணனி கண்ணிகள் !

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை கவர்ந்த போட்டியாளராக வலம் வந்தவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஜனனி.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஜனனி நடித்துவருவதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகிவருகின்றது.

இவ்வாறான நிலையில், ஜனனி இன்று மகிழ்ச்சியான அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய படத்துக்கு பூஜை போட்டது போல இளைஞர் ஒருவர் அருகே மாலையும் கழுத்துமாக ஜனனி நிற்கும் போட்டோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த படக்குழுவும் மாலை அணிந்து நிற்கும் நிலையில், புதிய படமா? என ரசிகர்கள் நினைத்து ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே புதிய ஆல்பம் பாடல் ஷூட்டிங் செய்யப் போறேன் என ஜனனி அந்த போட்டோவுக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.