வாக்குறுதியை மீறும் ஜனாதிபதி?

ஆளும் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று வரும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. வழமையாக இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும்.

ஆனால் இம்முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி மாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாட்டில் எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியில் இக்கூட்டம் மிக காரசாரமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல மாட்டேன் என ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் பல தடவை கோட்டாபய ராஜபக்ஷ உறுதி அளித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.