கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தில்லியில் சனிக்கிழமை மட்டும் 1.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தில்லியில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். இதுகுறித்த தகவலை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருக்கவும் என அவர் கூறியுள்ளார்.கொரோனா தடுப்புப் பணிகளுக்காக விராட் கோலியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்தார்கள்.