அண்மைய வரலாற்றில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் படு தோல்வியான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்தோடு குறுகிய காலத்தில் இந்தளவுக்கு பலவீனமான நிலைமைக்கு சென்ற எந்த அரசாங்கமும் இருக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் வெற்றியான அரசாங்கம் என்று கூறமுடியாது.
மேலும் பொருளாதாரம் மற்றும் சட்டத்துறையில் அரசாங்கம் தோல்வியடைந்து முடிந்துள்ளது. இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க தயாராக இருக்கின்றனர்.
அதற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைமையேற்க தயாராக உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.