பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி! மக்கள் வெள்ளத்தில் முதல் கரும்புலி மில்லரிற்கு அகவணக்கம்

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை சென்றடைந்துள்ளது.மேலும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றுள்ளனர்.

அத்தோடு தொடர்ந்து யாழ்ப்பாணம் நெல்லியடியில் முதல் கரும்புலி மில்லரிற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும் இதனை தொடர்ந்து பொலிகண்டி நோக்கி பேரணி நகர்ந்த செல்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு தமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என இந்த அறவழிப் போராட்டம் நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது இன்றைய தினம் பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வரவுள்ளது.