கனடாவில் யாழ் இளைஞன் 16வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!! கீழே விழுந்த போது இன்னொருவரின் மீது வீழ்ந்து அவரும் பலி!! நடந்தது என்ன?

கனடாவில் கடந்த 11ம் திகதி தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த 16 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.அவர் மேலிருந்து விழும் போது இன்னொருவர் மீது மோதுண்டமையினால் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேம்பிள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.